கர்நாடக முதல்வர் சித்தராமையா Center-Center-Bangalore
இந்தியா

கர்நாடகத்தில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்களால் பரபரப்பு!

கர்நாடகத்தில் ‘கரூரில் நடந்ததைப் போன்றதொரு அசம்பாவிதம்’ தவிர்ப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்களால் பரபரப்பான சூழல் நிலவியது.

தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் இன்று(அக். 20) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பயனாளிகளாக திரளான பெண்கள் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில், அங்கு வந்திருந்தவர்களுக்கு உணவும் பரிசுப் பொருள்களும் வழங்குவதில் தாமதமானது. இதற்காக, காலையிலிருந்தே அவ்விடத்துக்கு வந்திருந்த பெண்கள் உணவு, தண்ணீர் இன்றி வெகுநேரம் இருந்ததால் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

நிகழ்விடத்தில் 10 பெண்கள் மயங்கிக் கீழே விழுந்த நிலையில், அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு நீர்ச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு இப்போது நலம்பெற்றிருப்பதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 women fall ill after delay in distribution of food, gifts at CM's meet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கர்நாடக அரசு தடை செய்யவில்லை: முதல்வர் சித்தராமையா!

ரூ.75 ஆயிரம் கோடி! அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம வள ஒப்பந்தம்!

மெக்சிகோ வெள்ளம்: பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு! ரூ.4.8 ஆயிரம் கோடி நிவாரணம்!

பிகாரில் முதற்கட்ட தேர்தலில் 61 வேட்பாளர்கள் வாபஸ்!

மகளிர் உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!

SCROLL FOR NEXT