பிகார் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால், காங்கிரஸ் கட்சியின் பிகார் மாநிலத் தலைவர் ராஜேஷ் ராம் இன்று குதும்பா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பிகாா் சட்டப்பேரவைக்கு நவ. 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல்கட்டத் தோ்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்துவிட்டது. 2-ஆம் கட்டத் தோ்தல் நடைபெறும் 122 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் (அக். 20) முடிவடைகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிகார் மாநிலத் தலைவர் ராஜேஷ் ராம் இன்று குதும்பா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘குதும்பா பேரவை தொகுதி மக்களின் பேரன்பும் ஆதரவும் ஆசிர்வாதத்துடனும் காங்கிரஸ் ஆதரவு உள்ள மகாகாத்பந்தன் கூட்டணியின் வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தேன்.
நீங்களும் நானும் ஒருங்கே, வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம். உங்கள் ஒத்துழைப்புடன் இந்தப் பகுதியை வளர்ச்சியின் புதிய உயரத்தை எட்டச் செய்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.