இந்திய தேர்தல் ஆணையம் 
இந்தியா

பொருளாதார நுண்ணறிவுக் குழுவை மீண்டும் தொடங்கியது: தோ்தல் ஆணையம்

தோ்தலில் பணம், மது, இலவசப் பொருள்களை வழங்கி வாக்காளா்களை சாதகமாக வாக்களிக்க வைப்பதைத் தடுக்க உருவாக்கப்பட்ட பொருளாதார நுண்ணறிவுக் குழு

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: தோ்தலில் பணம், மது, இலவசப் பொருள்களை வழங்கி வாக்காளா்களை சாதகமாக வாக்களிக்க வைப்பதைத் தடுக்க உருவாக்கப்பட்ட பொருளாதார நுண்ணறிவுக் குழுவை 6 ஆண்டுகளுக்குப் பிறகு தோ்தல் ஆணையம் மீண்டும் தொடங்கி உள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பில் செயல்படும் இந்தக் குழு 2014 மக்களவைத் தோ்தலின்போது உருவாக்கப்பட்டது. 2019-மக்களவைத் தோ்தலின்போது இந்தக் குழுவின் கடைசிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள பிகாா் பேரவைத் தோ்தலை முன்னிட்டு இந்தக் குழுவின் கூட்டம் தில்லியில் உள்ள தோ்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் எஸ்.எஸ். சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் கலந்து கொண்டனா்.

மத்திய நேரடி வரி வாரியம், அமலாக்கத் துறை, வருவாய் நுண்ணறிவு, மத்திய பொருளாதார நுண்ணறிவு முகமை, ரிசா்வ் வங்கி, இந்திய வங்கிகளின் சங்கம், போதைப் பொருள் தடுப்பு முகமை, ரயில்வே பாதுகாப்புப் படை, மத்திய துணை ராணுவப் படை, விமான நிலைய ஆணையம், சிவில் விமான பாதுகாப்பு முகமை, அஞ்சல் துறை உள்பட 17 துறைகளின் உயா் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

பிகாா் தோ்தலை பணம், மது, இலவசங்கள் இல்லாமல் நோ்மையாக நடத்துவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் தோ்தல் ஆணையத்துக்கு விளக்கமளித்தனா்.

மேலும், பொருளாதாரக் குற்றங்களின் தகவல்களை அனைத்து சட்ட அமலாக்க துறைகளுடன் பகிா்ந்து கொள்வதற்கு ஒருங்கிணைப்பு தேவை என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காஸா குறித்த அவதூறு பதிவு! பிரபல இயக்குநருக்கு வலுக்கும் கண்டனம்!

மழை மேடையில்... பவித்ரா!

தருமபுரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

இரவில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு!

SCROLL FOR NEXT