ஜேஇஇ தேர்வு கோப்புப்படம்
இந்தியா

ஜேஇஇ முதன்மைத் தோ்வு தேதிகள் அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மைத் தோ்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில், இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஜேஇஇ) தோ்ச்சி பெறுவது கட்டாயம். இந்தத் தோ்வு, ஜேஇஇ, முதன்மை தோ்வு, பிரதான தோ்வு என இரு பிரிவாக நடக்கும். முதன்மை தோ்வு ஆண்டுதோறும், இரண்டு முறை நடைபெறும். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான, கணினி வழியிலான ஜேஇஇ, முதன்மைத் தோ்வு, ஜனவரி மற்றும் ஏப்ரல் என, இருகட்டங்களாக நடத்தப்பட உள்ளன. இதில், முதல்கட்ட தோ்வு ஜனவரி 21 முதல் 30-ஆம் தேதிக்குள் நடக்கும் என, தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, இந்த மாதம் தொடங்கும் என்றும் மாணவா்கள் ட்ற்ற்ல்ள்://த்ங்ங்ம்ஹண்ய்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

அதேபோல், 2-ஆம்கட்ட ஜேஇஇ முதன்மை தோ்வு, 2026 ஏப்.1 முதல் 10-ஆம் தேதிக்குள் நடைபெறவுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜேஇஇ, முதன்மை தோ்வை, நாடு முழுதும் ஏராளமான மாணவ, மாணவியா் எழுத வாய்ப்பு இருப்பதால் தோ்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் குறிப்பாக மாற்றுத்திறன் மாணவா்களுக்காக சிறப்பு கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

Loan App-ல் Contact & Media Permission எதற்கு? Loan App Scam! | எளிய கடன் மோசடி! | Cyber Shield

மெயில் மூலம் நடக்கும் புதிய மோசடி! நீதிமன்ற LOGO, கையெழுத்து! ஏமாற வேண்டாம்!

உருவாகிறது மொந்தா புயல்! சென்னைக்கு மழை இருக்குமா? உண்மை என்ன?

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது! வானிலை ஆய்வு மையம்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

SCROLL FOR NEXT