பிகாரில் பாரத ரத்னா கர்பூரி தாக்குர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு நவ. 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவ. 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தியா கூட்டணி இடையே பிரதான போட்டி நிலவுகிறது. ஜன் சுராஜ் கட்சி கணிசமான வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், பிகார் தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களுள் ஒருவராக உள்ள பிரதமா் மோடி, தனது பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார்.
பிகாரின் சமஸ்திபூருக்கு இன்று காலை வருகைதந்த மோடி, அங்குள்ள பாரத ரத்னா கர்பூரி தாக்குர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கர்பூரி தாக்குர் குடும்பத்தினருடன் உரையாடினார்.
அப்போது, பிகார் முதல்வரும் ஜக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமாரும் உடனிருந்தார்.
தொடர்ந்து, சமஸ்திபூா், பெகுசராய் ஆகிய இரு இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.
மீண்டும் அக்டோபா் 30-ஆம் தேதி பிகாருக்கு வருகை தரும் பிரதமர் மோடி, முஸாஃபா்பூா், சாப்ரா பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளாா். தொடர்ந்து, நவம்பா் 2, 3, 6, 7 ஆகிய தேதிகளிலும் பிரதமரின் பிரசாரக் கூட்டங்கள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.