பறவை மோதியதால் தில்லி சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் நாக்பூருக்கே திரும்பியது.
நாக்பூரில் இருந்து தலைநகர் தில்லிக்கு 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை மாலை 6.38 மணிக்கு புறப்பட்டது.
ஆனால் பறவை மோதியதால் விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள் மீண்டும் நாக்பூருக்கே திரும்பியது.
விமானம் நாக்பூரில் பாதுகாப்பாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கிவிடப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து விமானம் நாக்பூரில் பராமரிப்பு சோதனைகளுக்கு உட்பட்டு வருவதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதற்கு நீண்ட நேரம் தேவைப்படுவதால் விமானம் ரத்து செய்யப்பட்டது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பறவை மோதியதில் விமானத்தின் என்ஜின் கௌலிங் (கவர்) சேதமடைந்தது என்று தகவல் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தால் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.