‘மோந்தா’ புயல் அக். 28-இல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், ஒடிஸாவில் அடுத்த 3 நாள்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் அக். 28-ஆம் தேதி தீவிர புயலாக (மோந்தா) வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதிகளில் அக். 28 புயல் கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின்(புவனேசுவரம்) இயக்குநர் டாக்டர் மனோரமா மோஹண்ட்டி தெரிவித்திருப்பதாவது: “அக். 28 காலை புயல் தீவிரமடையக்கூடும். அக். 28 மாலை தொடங்கி இரவுக்குள் ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் புயல் கரையைக் கடக்கக்கூடும்.
புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 90 - 100 கி.மீ. வேகத்தில்(அதிகபட்சம் மணிக்கு 110 கி.மீ. வேகம்) தரைக்காற்று வீசக்கூடும். இதனால், ஒடிஸாவில் அடுத்த 2 - 3 நாள்களுக்கு கனமழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது” என்றார்.
ஒடிஸாவுக்கு மிக கனமழைப்பொழிவு இருக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் 30 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.