முகப்பு
இந்தியா

சென்னை சென்ட்ரல் செல்லும் 3 ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பாடு!

சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாக இயக்கம்!

Updated On : 28 அக்டோபர், 2025 at 12:04 PM
ரயில்கள் தாமதமாகப் புறப்பாடு!
பகிர்:

‘மோந்தா’ புயல் அக். 28-இல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • அதன்படி, ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்(22825) ஷாலிமர் ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 12.10 மணிக்குப் பதிலாக நள்ளிரவு 12.10 மணிக்குப் புறப்படும்.

  • ஹௌரா - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்(12841) ஹௌரா ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 3.10 மணிக்குப் பதிலாக நாளை(அக். 29) அதிகாலை 3.10 மணிக்குப் புறப்படும்.

  • சந்திரகாசி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(22807) சந்திரகாசி ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) மாலை 5.55 மணிக்குப் பதிலாக நாளை(அக். 29) அதிகாலை 5.55 மணிக்குப் புறப்படும்.

  • தான்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ்(13351) தான்பாத் ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 11.35 மணிக்குப் பதிலாக 7 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 6.35 மணிக்குப் புறப்படும்.

  • எஸ்எம்விடி பெங்களூரு - டானாபூர் எக்ஸ்பிரஸ்(03252) எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) இரவு 11.50 மணிக்குப் பதிலாக 6 மணி 40 நிமிஷங்கள் தாமதமாக நாளை(அக். 29) காலை 6.30 மணிக்குப் புறப்படும்.

summary

Owing to the cyclone impact, East Coast Railway has made changes and rescheduling in the pattern of train services.

முழு கட்டுரையைப் படிக்க →