மின்கம்பி உரசியதில் பேருந்து தீப்பிடித்தது 
இந்தியா

ஜெய்ப்பூரில் மின்கம்பி உரசியதில் பேருந்து தீப்பிடித்து 2 பேர் பலி!

தனியார் பேருந்து தொங்கும் மின்கம்பியை உரசியதில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தான் ஜெய்ப்பூரின் மனோகர்பூர் பகுதியில் தனியார் பேருந்து தொங்கும் மின்கம்பியை உரசியதில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தனியார் பேருந்து மனோகர்பூர் பகுதியில் உள்ள கச்சா சாலையில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மின்கம்பியை உரசிய நிலையில், பேருந்து தீப்பிடித்து எரிந்தது, பின்னர் அது அணைக்கப்பட்டதாக ஜெய்ப்பூர் காவல் கண்காணிப்பாளர் ராஷி டோக்ரா துடி தெரிவித்தார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு முதற்கட்டமாக இருவர் பலியான நிலையில், ஐந்து பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Two persons were electrocuted to death and five others injured when a private bus caught fire after coming in contact with a hanging wire in the Manoharpur area here on Tuesday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT