முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு வழியனுப்பு விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு வழியனுப்பு விழா நடத்தக் கோரிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ``இந்திய அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வு நடந்து 100 நாள்கள் ஆகிவிட்டன. திடீரென ஜூலை 21, நள்ளிரவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தன் பதவியை ராஜிநாமா செய்தார்.
எப்போதும் பிரதமரின் புகழைப் பாடிய போதிலும், ராஜிநாமா செய்யவே அவர் நிர்பந்திக்கப்பட்டார். 100 நாள்களாக, தினசரி தலைப்புச் செய்திகளில் இருந்த முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் முற்றிலும் அமைதியாக இருக்கிறார்.
அவர், மாநிலங்களவைத் தலைவராக இருந்தபோது, எதிர்க்கட்சிகளின் சிறந்த நண்பராக இருக்கவில்லை. எதிர்க்கட்சிகளை நியாயமற்ற முறையில்தான் இழுத்துச் செல்வார்.
இருப்பினும்கூட, ஜனநாயக மரபுகளுக்கேற்ப, முன்னாள் தலைவர்களுக்கு செய்ததைப்போல, வழியனுப்பு விழாவுக்கு ஜகதீப் தன்கர் தகுதியானவரே. இதனை எதிர்க்கட்சிகள் கூறி வந்தாலும், அது நடப்பதே இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 7 புதிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! இந்தியா - பாக். போர் குறித்து டிரம்ப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.