உலகம் முழுவதும் பிகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார்.
பிகாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களின் பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தர்பங்கா மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு வேலை வழங்குவதாக நம்பமுடியாத வாக்குறுதியை ஆர்ஜேடி அள்ளிவழங்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
வியாழக்கிழமை எங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் செயல்படுத்துவோம்.
20 ஆண்டுகளாக மாநிலத்தை ஆட்சி செய்த முதல்வர் நிதிஷ் குமார் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாது, முன்னாள் முதல்வரின் முழு குடும்பமும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுவது வருத்தமளிக்கிறது.
வக்ஃப் சட்டத்தில் திருத்தங்களை ரத்து செய்வதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக மாநில எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டிய அவர், அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் அவர்களால் அதைச் செய்ய முடியாது என்றார்.
தனது கட்சியான பாஜக, சாதி மற்றும் மத அரசியலில் ஈடுபடுவதில்லை என்றும், நாங்கள் நியாயமான, தூய்மையான அரசியலைச் செய்கிறோம்.
நரேந்திர மோடி அரசின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் மாநிலத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் ரூ. 15 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஓபிசி ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கியது ராகுல் காந்தி அல்ல, பிரதமர் மோடிதான் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.