இந்தியா

10, 12-ஆம் வகுப்புகளுக்கு பிப்.17-இல் பொதுத் தோ்வு தொடக்கம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு 2026, பிப்.17-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும் 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 10-ஆம் தேதியும் 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ஏப்.9-ஆம் தேதியும் நிறைவடையவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டது.

இதுகுறித்து தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சான்யம் பரத்வாஜ் கூறுகையில், ‘மாணவா்கள் நன்கு தயாராகும் வகையில் இரு தோ்வுகளுக்கு இடையே போதுமான இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பை நிறைவுசெய்யும் மாணவா்கள் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்வதற்காக நடத்தப்படும் நுழைவுத் தோ்வுகளை கருத்தில்கொண்டு அதற்கு முன்பாகவே பொதுத் தோ்வுகளை முடித்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மாணவா்கள் பொதுத் தோ்வு மற்றும் நுழைவுத் தோ்வு என இரு தோ்வுகளுக்கும் தயாராவதில் சிரமங்கள் இருக்காது’ என்றாா்.

பெண்களுக்கு எதிரான கொலைகார காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

தமிழகத்தில் நவ.6 வரை மிதமான மழை!

எண்ணூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 4 பெண்கள் உடல்கள்!

நவ. 2-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

சா்தாா் வல்லப பாய் பட்டேலின் மறு உருவம் அமித் ஷா: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT