பயங்கரவாத செயல்களில் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 2 அரசு அதிகாரிகளை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டார்.
அதன்படி, கல்வித் துறையில் ஆசியர்களாகப் பணியாற்றும் குலாம் உசேன் மற்றும் மஜித் இக்பால் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் ரியாசி மாவட்டத்தின் மஹோர் தாலுகாவில் உள்ள கல்வா முலாஸிலும், அதே நேரத்தில் மற்றொருவர் தார் ரஜௌரி மாவட்டத்தின் கியோரா பகுதியில் உள்ள வார்டு எண்.1ல் வசிப்பவர் ஆவார்.
இவர்களின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் பணிநீக்கம் செய்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் 12-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் எந்த விசாரணையும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.