போலி ஆதார் அட்டைகள் தயாரிக்கப்பட்டு, போலியான வாக்காளர்கள் பதிவு செய்யப்படுவதாக மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மும்பையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரில் போலியான ஆதார் அட்டையைத் தயாரித்த தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்எல்ஏ ரோஹித் பவார், போலி ஆதார் அட்டை செயல்முறையை வெளிக்கொண்டு வரவே இதனைச் செய்ததாகக் கூறியுள்ளார்.
கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பரவலான வாக்குத் திருட்டு மற்றும் போலி வாக்காளர்கள் குறித்து குற்றம் சாட்டிய ரோஹித் பவார், குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் போலி ஆதார் அட்டை குறித்த சோதனையை நடத்தினார்.
இருப்பினும், போலி ஆதார் அட்டையைத் தயாரித்ததாக ரோஹித் பவார் மீதும், இணையதளத்தை உருவாக்கிய அடையாளம் தெரியாதவர்கள் மீதும் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதையும் படிக்க: போரில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி! இந்தியா பதிலடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.