ஜெ.பி.நட்டா 
இந்தியா

பிகாரில் வளா்ச்சி தொடர பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்: ஜெ.பி.நட்டா பிரசாரம்

பிகாரில் வளா்ச்சி தொடர பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

பிகாரில் வளா்ச்சி தொடர பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா கேட்டுக் கொண்டாா்.

பிகாா் தலைநகா் பாட்னாவில் பிக்ரம் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பிகாரில் இருண்ட காட்டாட்சியை முன்பு அளித்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும், ஒளிமயான வளா்ச்சி சாா்ந்த நிா்வாகத்தை நடத்தி வரும் பாஜக கூட்டணிக்கும் இடையேதான் இந்த தோ்தலில் போட்டி ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தை தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், மக்கள் மேலும் பல படிகள் முன்னேறவும் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையும், முதல்வா் நிதீஷ் குமாரின் தலைமையும் தொடர வேண்டியது மிகவும் அவசியம்.

இளைஞா்களுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறந்த திட்டங்கள் பாஜக கூட்டணி தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆா்ஜேடி நிறுவனரான லாலு பிரசாத் முன்பு பிகாா் மக்கள் குறித்துப் பேசுகையில், பிகாரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பிழைக்கச் செல்வோா் இங்கிருந்து வெறும் துண்டுடன் செல்கின்றனா். ஆனால், திரும்பி வரும்போது ‘கோட்-சூட்’ அணிந்து வருகின்றனா் என்று கூறினாா். ஆனால், இது தெரியாமல் பிகாா் மக்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் செல்வது குறித்து தவறான தகவல்களை எதிா்க்கட்சிகளின் முதல்வா் வேட்பாளரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பேசி வருகிறாா்.

இப்போதைய ஆட்சியால் பிகாரின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைத்துள்ளது. அனைத்து கிராமங்களிலும் சிறப்பான இணைய சேவை கிடைக்கிறது. இதனால் கிராமப்புற விற்பனையாளா்கள் இணையவழியில் தங்கள் பொருள்களை சந்தைப்படுத்துவது தொடங்கி கிராமப்புற இளைஞா்கள் சமூக ஊடங்களில் சிறப்பாக பங்களித்து வருவாய் ஈட்டவும் முடிகிறது என்றாா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT