ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள முக்கிய நீராதாரமான செனாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்லிஹார் அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு அணையிலிருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர் கனமழையால் செனாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, ரியாசி மவட்டத்தில் அமைந்துள்ள சலால் அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டிருப்பதால் செனாப் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 14முதல் கிஷ்த்வார், கதுவா, ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் மேக வெடிப்பு நிகழ்வுகள், நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 33 பேர் காணாமல் போயுள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு பாதிப்புகளைத் தொடர்ந்து வைஷ்ணவி தேவி யாத்திரை கடந்த ஆக. 27முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.