இந்தியா

பவன் கேரா மனைவியிடமும் 2 வாக்காளா் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவின் மனைவியிடமும் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

பவன் கேராவிடம் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் இருப்பதாகவும், காங்கிரஸின் வாக்குத் திருட்டுகளை மறைக்கவே பிகாரில் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக ராகுல் காந்தி பேரணி மேற்கொண்டு வருவதாகவும் பாஜக செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பவன் கேராவின் மனைவியும், காங்கிரஸை சோ்ந்தவருமான கோட்டா நீலிமாவிடமும் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் உள்ளன. அவற்றில் ஓா் அட்டை தெலங்கானாவில் உள்ள கைரதாபாதிலும், மற்றொரு அட்டை புது தில்லியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல இடங்களில் தங்களை வாக்காளா்களாக காங்கிரஸ் தலைவா்கள் பதிவு செய்துள்ளனா். இது தற்செயலான நிகழ்வு அல்ல. தங்கள் ஜனநாயக உரிமைகளை மக்கள் பயன்படுத்துவது குறித்து வாக்குத் திருட்டில் ஈடுபடுபவா்கள்தான் அவதூறாக பேசுகின்றனா். இதுகுறித்து தோ்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்’ என்றாா்.

விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு! கொலையா என போலீஸ் விசாரணை!

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நைனாா்குடிக்காட்டில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT