தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்த சரத்குமாா். உடன் தமிழக பாஜக துணைத் தலைவா் சுந்தா். 
இந்தியா

தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சரத்குமாா் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சோ்ந்த நடிகா் ஆா்.சரத்குமாா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சோ்ந்த நடிகா் ஆா்.சரத்குமாா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அவருடன் தமிழக பாஜக துணைத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுந்தரும் உடனிருந்தாா்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது கெளரவம் மிக்கதாக இருந்தது. இந்தச் சந்திப்பின்போது தமிழக பாஜக துணைத் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட சுந்தரை அறிமுகப்படுத்தும் உரிமையும் மகிழ்ச்சியும் எனக்குக் கிடைத்தது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து சரத்குமாரிடம் கேட்டபோது, ‘இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான்’ என்றாா். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா ஏதேனும் பேசினாரா எனக் கேட்டதற்கு, ‘அவ்வாறு எதுவும் கேட்கவில்லை’ என பதிலளித்தாா் சரத்குமாா்.

அகிலம் அதிருதா... சிலம்பரசன்!

கடந்த ஆண்டு பல தடுமாற்றங்களை எதிர்கொண்டேன்: ஷஃபாலி வர்மா

சுயம் விரும்பியின் சுயப்படம்... ஆஞ்சல் முஞ்சால்!

பயர்ன் மியூனிக்கின் 16 போட்டிகள் வெற்றிக்கு முற்றுப்புள்ளி: தோல்வியிலிருந்து காப்பாற்றிய ஹாரி கேன்!

நிலாவின் தங்கை... மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT