கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது!

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு -காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர், எல்லை பாதுகாப்புப் படையினரால் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் சர்வதேச எல்லையில் ஆர்.எஸ். புரா செக்டார் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர், வேலியைத் தாண்டி இந்தியாவுக்குள் ஊருடுவ முயன்றுள்ளார்.

இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்து அவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து பாகிஸ்தான் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் பாகிஸ்தானில் சர்கோதா நகரைச் சேர்ந்த சிராஜ் கான் என்று தெரியவந்துள்ளது. அவர் இந்தியாவுக்குள் வருவதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Pakistani Intruder Apprehended Along International Border In Jammu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப். 11 இல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

மேட்டூர் அணை நிலவரம்!

சமூக ஊடகங்களுக்கான தடை நீக்கம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம்!

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT