எய்ம்ஸ் மருத்துவமனை  
இந்தியா

கருச்சிதைவு: ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கருவை தானமளித்த பெண்!

கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில், ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கருவை தானமளித்த பெண் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

ஐந்தாவது மாதத்தில் கருச்சிதைவு ஆன நிலையில் 32 வயது பெண், ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தனது கருவை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம் செய்தார்.

ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த வந்தனா ஜெயினுக்கு திடீரென கருச்சிதைவு ஏற்பட்டது. அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், கருவை தானமளிக்க அவர் முன்வந்தார்.

தில்லியின் பிதாம்பூராவைச் சேர்ந்த வந்தனா ஜெயின், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலுடன் கருவை தானம் செய்ய முடிவு செய்தார். கருவை தானம் பெற ஆகம் ஸ்ரீ அறக்கட்டளை அனைத்து முன்முயற்சிகளையும் மேற்கொண்டது.

எங்கள் குடும்பம் மிகப்பெரிய துயரத்தை சந்தித்துள்ளது. ஆனாலும், மிகப்பெரிய நல்ல காரணங்களுக்காக கருவை தானம் செய்ய முடிவு செய்திருப்பதாக வந்தனா ஜெயின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

வந்தனாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் கரு அகற்றப்பட்டு, அது எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கு இந்த கரு பயன்படுத்தப்படும் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை எதிரொலி: பெரும் போராட்டம் வெடித்தது!

விழிகளில் ஒரு வானவில்... ஸ்ரீலீலா!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஆர்எஸ் கட்சியும் புறக்கணிப்பு!

ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

ஓவியம்... நந்திதா ஸ்வேதா!

SCROLL FOR NEXT