ஐஸ்வர்யா ராய் Instagram / Aishwarya Rai
இந்தியா

ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு!

ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு...

இணையதளச் செய்திப் பிரிவு

தனது அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பல்வேறு வலைதளங்கள் அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

”பல்வேறு நிறுவனங்கள் அவர்கள் தயாரிக்கும் பொருள்களை விளம்பரப்படுத்துவதற்காக எனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

தனது ஏஐ புகைப்படங்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் வணீக ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தனது தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்க வேண்டும். எனவே, அனுமதியின்றி எனது புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தேஜாஸ் கரியா, “தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், ஐஸ்வர்யா ராயின் அனுமதியின்றி அவரது புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பயன்படுவதற்கு தடை விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

Bollywood actress Aishwarya Rai has filed a case in the Delhi High Court seeking a ban on the use of her photographs without her permission.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.10 லட்சம் பணம் மோசடி: இளைஞா் கைது

தொழிலாளி அடித்துக் கொலை; 4 இளைஞா்கள் கைது! விபத்தில் பலியானதாகக் கூறியது அம்பலம்!

காஞ்சிபுரத்தில் கலைஞா் நூலகம்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை!

பனங்குளம் சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT