முகப்பு
செய்திகள்

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் குறித்து...

Updated On : 15 ஏப்ரல் 2026, 8:31 pm IST
ஐஸ்வர்யா மேனன் பட போஸ்டர். - படங்கள்: எக்ஸ் / அபிஷேக் பிக்சர்ஸ்.
பகிர்:

நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள நாகபந்தம் என்ற புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், சுவர்ணா எனும் கதாபாத்திரத்தில் ஸ்வர்யா மேனன் நடித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான அபிஷேக் நாமா இயக்கியுள்ள நாகபந்தம் என்ற பான் இந்தியத் திரைப்படத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

தமிழில் காதலில் சொதப்புவது எப்படி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன் அறிமுகமானாலும் நடிகர் சிவா உடன் தமிழ்ப் படம் 2 படத்தில் நடித்து நாயகியாக கவனம் பெற்றார்.

Advertisement

Advertisement

தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் நடித்துவரும் ஐஸ்வர்யா மேனன் நாகபந்தம் என்ற இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொன்மைக் காலக் கதையாக 1700-களில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் வரும் ஜூலை 3ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், ஏப்.19ஆம் தேதி இரண்டாவது பாடல் வெளியாகவிருக்கிறது.

summary

Aishwarya Menon's Nagabandham: The Secret Treasure Movie: Introduction Poster!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.