முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!

பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறித்து....

Updated On : 2 ஏப்ரல் 2026, 6:47 pm IST
சந்தீப் ராய் ரத்தோர் - (கோப்புப் படம்)
பகிர்:

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு (டிஜிபி) காவல் துறையின் தலைமை இயக்குநராக சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஏப். 2) நியமிக்கப்படுள்ளார்.

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது புதிய டிஜிபியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

Advertisement

Advertisement

இதுமட்டுமின்றி 2 ஆட்சியர்கள், 2 காவல் ஆணையர்கள், ஒரு ஐஜி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மேற்கு மண்டல ஐஜியாக ரம்யா பாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டு அபிஷேக் தீக்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையராக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விசு மகாஜன், சேலம் ஆட்சியராக அருண் தன்புராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

summary

Sandeep Rai Rathore Appointed as Tamil Nadu Law and Order DGP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.