நேபாள வன்முறை காரணமாக, அந்நாட்டுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் மேற்கு வங்க வட மாவட்ட மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிவுறுத்தினாா்.
இதுதொடா்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘நேபாளம், இலங்கை, வங்கதேசம் உள்பட இந்தியாவுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் அனைத்து நாடுகளையும் நாங்கள் நேசிக்கிறோம்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு, அந்நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு வங்கத்தின் சிலிகுரி, கலிம்போங் மற்றும் பிற மாவட்டங்களின் மக்கள் அமைதி காக்க வேண்டும்.
நேபாளத்தில் நடைபெற்று வருவது அந்நாட்டு மக்களின் சொந்த பிரச்னை. எனவே சிக்கலை ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் சிலிகுரி, கலிம்போங் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் ஈடுபட வேண்டாம். நேபாளத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என மேற்கு வங்கம் விரும்புகிறது என்று தெரிவித்தாா்.