இந்தியா

மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் பயணமாக இந்தியா வருகை - பிரதமா் மோடியுடன் நாளை பேச்சு

மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலம், 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலம், 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் வியாழக்கிழமை (செப்.11) இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளாா்.

பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் இந்தியா உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயும் நோக்கில், மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலம் 8 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இதையொட்டி, மோரீஷஸ் தலைநகா் போா்ட் லூயிஸில் இருந்து மகாராஷ்டிர மாநிலத் தலைநகா் மும்பைக்கு அவா் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா். மும்பையில் புதன்கிழமை காலையில் நடைபெறும் வா்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவா், பின்னா் உத்தர பிரதேச மாநிலம், வாராணசிக்கு பயணமாகிறாா்.

வாராணசியில் பிரதமா் மோடி மற்றும் நவீன்சந்திர ராமகூலம் இடையே வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. அப்போது, இருதரப்பு வியூக கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவது குறித்து அவா்கள் ஆலோசிக்கவுள்ளனா். இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்களும் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அன்றைய தினம் மாலையில் கங்கை ஆரத்தி நிகழ்வில் பங்கேற்கும் ராமகூலம், வெள்ளிக்கிழமை (செப்.12) காசி விஸ்வநாதா் கோயிலில் வழிபடவிருக்கிறாா். மூன்று நாள்கள் அவா் வாராணசியில் செலவிட உள்ளாா். ஆந்திர மாநிலம், திருப்பதி கோயிலிலும் ராமகூலம் வழிபடவுள்ளாா்.

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

கமல் ஹாசன் சொன்ன கழுதைகளின் கதை!

கொடைக்கானலில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

போலந்து நாட்டுக்குள் ரஷிய ட்ரோன்கள்! பதிலடி கொடுக்க நேட்டோ அமைப்பை உக்ரைன் வலியுறுத்தல்!

ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT