இண்டிகோ விமான சேவை 
இந்தியா

நேபாளத்தில் வன்முறை: விமான சேவைகள் நிறுத்தம் நீட்டிப்பு!

நேபாளத்தில் போராட்டம் நிகழ்வதால் இண்டிகோ உள்பட விமான சேவைகள் இன்றும் ரத்து..

இணையதளச் செய்திப் பிரிவு

காத்மாண்டுவில் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவது நீடிக்கப்பட்டுள்ளதால் இன்று மாலை 6 மணி வரை விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், அரசின் மிகப்பெரிய ஊழலுக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் திங்கள்கிழமையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு அரசுக் கட்டடங்கள் சூறையாடப்பட்டு, பொதுச் சொத்தும் பெரிதளவில் சேதப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், நாடுதழுவிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய நேபாள ராணுவம், நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகளை விதித்தது.

இதையடுத்து, காத்மாண்டுவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதை நீட்டித்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6 மணி வரை காட்மாண்டுவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படும் என்று விமான நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நேபாளத்தில் நடந்து வரும் வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் அனைத்து விமானங்களையும் செப்டம்பர் 10(இன்று) ரத்து செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கானின் ஆரோமலே: அறிமுக விடியோ அப்டேட்!

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

SCROLL FOR NEXT