நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் ஜகதீப் தன்கர், வெங்கையா நாயுடு, முகமது ஹமீத் அன்சாரி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், தனது பதவியை கடந்த ஜூலை 21-ஆம் தேதி ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அப் பதவிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெற்றது.
இந்தத் தோ்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மகாராஷ்டிர ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சாா்பில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சுதா்சன் ரெட்டியும் போட்டியிட்டனா். இதில், சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.