கோப்புப் படம் ANI
இந்தியா

பசுவை விலங்காகக்கூட கருதுவதில்லை! தெருநாய் விவகாரத்தில் பிரதமர் மோடியால் சிரிப்பலை!

பெரும்பாலான விலங்கு ஆர்வலர்கள் பசுவை விலங்காகக் கருதவில்லை என்ற பிரதமர் மோடியின் கருத்தால் சிரிப்பலை

இணையதளச் செய்திப் பிரிவு

பெரும்பாலான விலங்கு ஆர்வலர்கள் பசுவை விலங்காகக் கருதவில்லை என்ற பிரதமர் மோடியின் கருத்து கவனம் பெற்றுள்ளது.

தில்லியில் விக்யாக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

சில விலங்கு ஆர்வலர்களை அவர் சந்தித்ததாக நிகழ்ச்சியின் இடையே பிரதமர் மோடி கூறினார்.

இதனைக் கேட்டதும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் சிரித்தனர். இதனைத் தொடர்ந்து, கூட்டத்தினரைப் பார்த்து பிரதமர் மோடி பேசியதாவது, ``நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? நம் நாட்டில் விலங்கு ஆர்வலர்கள் அதிகளவில் உள்ளனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் பசுவை ஒரு விலங்காகக்கூட கருதுவதில்லை'' என்று தெரிவித்தார்.

பிரதமரின் இந்தக் கருத்து, அரங்கில் இருந்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் உள்பட பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

சமீபத்தில் தெருநாய்கள் குறித்த விவகாரம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பிரதமரின் இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.

தெருநாய் அல்லது வளர்ப்பு நாய் மட்டுமே விலங்குகள் கிடையாது என்ற பொருளில் பிரதமர் மோடி சுட்டிக்காட்ட முயன்றார்.

2024-ல் பாஜக ஆட்சி வந்ததில் இருந்தே, பசுக்களின் பாதுகாப்புக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2019-ல் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற அமைப்பையும் அமைத்தது.

இதையும் படிக்க: நாள்கணக்கில் உலகப் பயணம்; மணிப்பூரில் 5 மணி நேரம்தான்! -காங். விமர்சனம்

Many animal lovers in India don’t consider cow an animal: PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பா்கூா் மலைப் பாதையில் எம்எல்ஏவின் காரை வழிமறித்த காட்டு யானை

கண்டுபிடி கண்ணே!

ஜூப்ளி கேக்

பசு நேசன்...

பிஞ்சுக் கைவண்ணம்

SCROLL FOR NEXT