துபையில் நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து, மகாராஷ்டிர முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி நடத்துவது தேசிய உணர்வுகளுக்கு ஒரு அவமானம். நமது வீரர்கள் எல்லைகளில் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் போது நாம் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா?.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆசிய கோப்பை போட்டியைப் புறக்கணிப்பது பயங்கரவாதம் குறித்த நமது நிலைப்பாட்டை உலகிற்கு தெரிவிக்க ஒரு வாய்ப்பாகும். இப்போட்டியை எதிர்த்து மகாராஷ்டிர முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பாஜக தலைமையிலான மத்திய அரசை சாடிய உத்தவ் தாக்கரே, இந்த கிரிக்கெட் போட்டியை தேசபக்தியின் ஒரு கேலிச்சித்திரம் என்று விமர்சித்தார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி அதன் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நாளை (செப்டம்பர் 14) அதன் அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.