யானை திருடு போய்விட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்ற நபர் ஜார்க்கண்டின் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். அதில், ராஞ்சியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூருக்குச் சென்று கொண்டிருந்த பெண் யானை, பலாமுவில் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி லால்ஜி கூறுகையில், யானையும் யானை பாகனும் பலாமுவின் ஜோர்கட் பகுதியில் இருந்து காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் யானை குறித்து எந்த தடயமும் கிடைக்காததால், புகார் அளித்து யானையின் உரிம எண்ணை அவர் சமர்ப்பித்தார். இவ்வாறு குறிப்பிட்டார்.
மேதினிநகர் வன அதிகாரி சத்யம் குமார் தெரிவிக்கையில், பலாமுவில் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு, உரிமையாளர் யானையை ராஞ்சிக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர் அதை பலாமுவில் உள்ள ஒரு யானைப் பாகனிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு அந்த யானையுடன் யானைப் பாகன் காணாமல் போனார்.
மேலும் விவரங்களைப் பெற சதார் காவல் நிலையத்திற்கு வனத்துறை அதிகாரி அனுப்பப்பட்டுள்ளார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.