முன்னாள் முதல்வர் பைரன் சிங் ANI
இந்தியா

மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங்

மோடி வருகை குறித்து மணிப்பூர் முன்னாள் முதல்வர் பைரன் சிங் பதிவு...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும் என முன்னாள் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் வன்முறை தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் மணிப்பூரில் வன்முறை நடந்தபோது முதல்வராக இருந்த பைரன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மணிப்பூர் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். இந்த தருணம் மணிப்பூரில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று என்று மணிப்பூர் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். மணிப்பூர் வரும் நாள்களில் பாதுகாப்பானதாகவும் வலிமையானதாகவும் வளமானதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் எதிர்நோக்குகிறோம்" என்று கூறியுள்ளார்.

மணிப்பூரில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சியை மேலும் மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Former Manipur CM Biren Singh says Will lead us to peace lasting progress on PM Modi Manipur visit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கையின் வாசம்... துஷாரா விஜயன்!

வெள்ளைப் புறா.. ஐஸ்வர்யா மேனன்!

எஸ்டிஆர் படத்துக்கு இசையமைக்கும் ஜிவி!

இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு! முதல்வர் வாழ்த்து!

இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்!

SCROLL FOR NEXT