செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, அவரது தாயார் ஆகியோரைச் சித்திரித்து சர்ச்சைக்குரிய விதத்தில் காணொலி வெளியிட்டதகாக எதிர்க்கட்சியான பிகார் மாநில காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மோடியின் தாயார் ஹீராபென் மோடி கடந்த 2022-இல் காலமானார். இந்த நிலையில், அவரைப் போன்றதொரு பெண்ணிடம் மோடி கற்பனையில் பேசுவது போல 36 விநாடி காணொலியை பிகார் காங்கிரஸ் சமூக ஊடகங்களில் வெளியிட்டது.
இந்த விடியோ, யாரையும் தரக்குறைவாக எண்ணி வெளியிடப்படவில்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், இதனால் பிரதமரின் தாயாருக்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாக தில்லி காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது குறித்து தில்லி பாஜக தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் மீது தில்லி காவல் துறையால் வழக்கு பதியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.