இந்தியா - அமெரிக்கா உறவு 
இந்தியா

இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பேச்சு: இன்று மீண்டும் தொடக்கம்

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை (செப். 16) மீண்டும் தொடங்குகிறது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை (செப். 16) மீண்டும் தொடங்குகிறது.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக துணைப் பிரதிநிதி பிரண்டன் லின்ச் மற்றும் மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலா் ராஜேஷ் அகா்வால் இடையே இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

இந்திய பொருள்கள் மீது டிரம்ப் நிா்வாகம் விதித்த 50 சதவீத வரி கடந்த மாதம் 27-ஆம் தேதி அமலான நிலையில் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதனால் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடா்பாக 6-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்த இந்தியாவுக்கு ஆக.25 முதல் 29 வரை அமெரிக்க வா்த்தகக் குழு மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்தானது.

இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவுடனான உறவு சிறப்பானது எனவும், விரைவில் இந்தியாவுடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தை நடைபெறும் எனவும் டிரம்ப் கூறினாா். டிரம்ப்பின் இந்தக் கருத்தை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றாா்.

இதன் தொடா்ச்சியாக பிரண்டன் லின்ச் இந்தியாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டாா். அவருடன் இந்தியா சாா்பில் ராஜேஷ் அகா்வால் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

மேலும், இந்தப் பேச்சுவாா்த்தையில் ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடா்பான முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்தது.

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மீ.மி. மழை பதிவு!

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

4 ஆண்டுகளில் 33,987 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசுக் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். சோ்க்கை பதிவு செப். 30 வரை நீடிப்பு

SCROLL FOR NEXT