பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு தொழிலாளர்களாக பணிபுரியும் பெண்களின் குழந்தைகளுக்காக 500 காப்பகங்கள் தில்லி அரசு தொடங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
தில்லி செயலகத்தில் விஸ்வகர்மா பூசை செய்த பிறகு, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்தற்காகத் தொழிலாளர்களை முதல்வர் பாராட்டினார். தொழிலாளர்களின் கடின உழைப்பு இல்லாமல் எந்த மாநிலத்தின் வளர்ச்சியும் சாத்தியமில்லை என்றார்.
தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, ஏழைகளுக்குப் பயனளிக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம், ஆரோக்கிய மந்திர் மருத்துவமனைகள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு தொடங்கியுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு "பால்னா" என்ற பெயரில் 500 குழந்தைகள் காப்பகங்களை தொடங்க உள்ளோம். பெண் தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போது அவர்களின் குழந்தைகள் அங்குக் கவனித்துக் கொள்ளப்படுவார்கள்.
தில்லி தொழிலாளர்களுக்குச் சொந்தமானது, அரசு அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று முதல்வர் கூறினார்.
செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அன்றைய தினம் ஒடிசாவில் 75 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஹாலிவுட் தொடரில் நடிக்கும் சித்தார்த்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.