மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில், 2 பெண் நக்சல்கள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
எட்டப்பள்ளி தாலுக்காவில் உள்ள மொடாஸ்கே கிராமத்தின் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதாக, காவல் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் இணைந்து, இன்று (செப்.17) காலை நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில், 2 பெண் நக்சல்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களது சடலங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், கொல்லப்பட்ட நக்சல்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.