திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!
பிரபல நடிகை திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...
உத்தரப் பிரதேசத்தில், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிகள் காவல் துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பரேலியில் உள்ள நடிகை திஷா பதானியின், வீட்டின் வெளியே கடந்த செப்.12 ஆம் தேதி அதிகாலை 3.45 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்தத் தாக்குதல் குறித்து, வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகள் ரோஹித் கோதாரா - கோல்டி பிரார் குழுவைச் சேர்ந்த ரவிந்திரா மற்றும் அருண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளிகள் இருவரையும் காசியாபாதின் ட்ரோனிகா நகரத்தில், நொய்டா சிறப்பு அதிரடிப் படை மற்றும் தில்லி காவல் துறையினர் இன்று (செப்.17) சுற்றிவளைத்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் ரவிந்திரா மற்றும் அருண் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி தற்போது பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!
In Uttar Pradesh, the accused who opened fire outside the house of popular Bollywood actress Disha Patani were shot dead in a police encounter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.