காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிகார் மாநிலத்தில் ஊடுருவல் நிரம்பி வழியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார்.
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நிகழவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், கட்சித் தொழிலாளர்கள் மாநாட்டில் அமித் ஷா உரையாற்றினார். அவர் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு முறையும் பொய்யான கதைகளைப் பரப்பி வருகின்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடத்திய வாக்காளர் அதிகார யாத்திரை வாக்கு திருட்டுக்கானது அல்ல.. நல்ல கல்வி, வேலைவாய்ப்பு, மின்சாரம், சாலைகளுக்கானது அல்ல. வங்கதேசத்திலிருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகத்தான்.
நமது இளைஞர்களுக்குப் பதிலாக ராகுல் அவர்களுடைய நிறுவனமும் வாக்கு வங்கி ஊடுருவலகாரர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வைப் பரப்புமாறு பாஜக தொழிலாளர்களை அவர் வலியுறுத்தினார். தவறுதலாகக் கூடக் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பிகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடுருவல்கார்கள் மட்டுமே இருப்பார்கள் என்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சொல்ல வேண்டியது நமது பொறுப்பு என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.