ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரை வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
ரியாசி மாவட்டத்தின் கத்ரா பகுதியில் உள்ள திரிகூட மலையில் பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 34 பக்தா்கள் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா். இதனால் வருடாந்திர யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
தொடா்ந்து மோசமான வானிலை நிலவிய சூழலில், 22 நாள்களுக்குப் பிறகு யாத்திரை புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆனால், சில மணி நேரத்திலேயே நிறுத்தப்பட்டதால், பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.
வியாழக்கிழமை வானிலை சீரடைந்ததால், யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது. ஹெலிகாப்டா் சேவையைப் பயன்படுத்த விரும்புவோா், அதற்குப் பதிவு செய்து கொள்ளலாம் என்று கோயில் வாரியம் அறிவித்துள்ளது.
யாத்திரை சுமுகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், அடிவார முகாமில் பல நாள்களாக காத்திருக்கும் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இதையும் படிக்க: கல்கி ஏடியில் தீபிகா படுகோன் இல்லை... தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.