செப்டம்பர் 21ஆம் தேதி நிகழும் பகுதி சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. பூமியின் தெற்கு கோளப் பகுதியில் மட்டுமே காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வந்து மறைப்பதே சூரிய கிரகணம். இந்த கிரகணத்தின்போது சூரியனை நிலவு முழுமையாக மறைக்காது என்பதால் பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது.
ஏன் பகுதி சூரிய கிரகணம் நிகழ்கிறது?
சூரியன், நிலா, பூமி என அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமையவில்லை, எனவே, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா குறுக்கிடும்போது, சூரியனின் 85 சதவீதத்தை மட்டுமே மறைப்பதால் பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இந்த கிரகணமானது, இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி கிரகணமாகும். இந்த கிரகணத்தின்போது 85 சதவீத சூரியன் நிலவால் மறைக்கப்படும். அதனால்தான் இது பகுதி சூரிய கிரகணமாகிறது. இந்திய நேரத்தைப் பொறுத்தவரை இது செப். 21ஆம் தேதி இரவு 10.59 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 1.11 மணிக்கு முழுமையடைந்து செப்.22ஆம் தேதி அதிகாலை 3.23மணிக்கு நிறைவடைகிறது.
சூரிய கிரகணம் நிகழ்வது இந்திய நேரப்படி நள்ளிரவு என்பதால், சூரியன் வானிலிருந்து மறைந்துவிடும், எனவே, இந்திய மக்களால் இந்த வான அதிசயத்தைக் காண இயலாமல் போகிறது. எனவே, பூமியின் தெற்கு கோளப் பகுதி மக்களால் மட்டுமே இதனைக் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில், பசுபிக் தீவுகள், அன்டார்டிகா, நியூ ஸிலாந்து, கிழக்கு ஆஸ்திரேலிய மக்கள் மட்டுமே இதனைக் காண முடியும். ஆனால், உலகின் எங்கிருந்தும், இதனை நேரலையாகக் காண்பதற்கு பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணத்தைக் காண அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்றால் அது ஆஸ்திரேலியா மற்றும் நியூ ஸிலாந்து மக்கள்தான். இந்த சூரிக கிரகணத்தின்போது, வானம் ஓரளவு இருளில் மூழ்குமாம். இந்தியா, ஐரோப்பா நாடுகள், ஆப்ரிக்கா, அமெரிக்கா என மற்ற நாடுகள் எதுவும் இதனைக் காண இயலாது.
அடுத்த சூரிய கிரகணம் எப்போது?
இந்தியாவில் அடுத்த சூரிய கிரகணத்தைக் காண வேண்டும் என்றால் அது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதிதான். அன்றைய தினமும், இந்தியாவில் பகுதி சூரிய கிரகணம்தான் தெரியும். சூரிய கிரகணம் தொடங்குவது ஆகஸ்ட் 2ஆம் தேதி பிற்பகலில்தான். எனவே, சூரியன் மறைவதற்குள் நாம் பகுதி சூரிய கிரகணத்தைத்தான் காண முடியும்.
இதையும் படிக்க...டெக்கான் குயின் டூ வந்தே பாரத்! ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் பணி ஓய்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.