உதம்பூரில் ராணுவ வீரர்கள் - பயங்கரவாதிகள் இடையே சண்டை PTI
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு! ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர் கொல்லப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வெள்ளிக்கிழமை பலியாகினார்.

உதம்பூர் மாவட்டத்தில் உள்ள தோடா - உதம்பூர் எல்லையில் கிஷ்த்வார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறையில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையின் தலைமையில் வியாழக்கிழமை மாலை முதல் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், இன்று அதிகாலை வனப் பகுதிக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து, மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருவதாகவும், அவர்கள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Army soldier killed in Jammu and Kashmir

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜென் ஸீ தேவதை... அனஸ்வரா!

ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிவேக சதம் விளாசி பெத் மூனி சாதனை!

திருவாரூரில் தவெக தலைவர் விஜய்!

அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்வு?

லத்தூரில் கனமழை: 40 மணி நேரத்திற்குப் பிறகு 5 பேரின் சடலங்கள் மீட்பு

SCROLL FOR NEXT