கொல்கத்தாவில் நவராத்திரி பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள பந்தலில் பிரம்மாண்ட துா்கை சிலையை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி. 
இந்தியா

ஜிஎஸ்டி குறைப்பால் நாங்கள் ரூ.2000 கோடி வருவாயை இழக்கிறோம்? - மம்தா பானா்ஜி

ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதற்கான யோசனை மாநில அரசுகளிடம் இருந்து வந்தபோதிலும், அதற்கான தேவையற்ற பாராட்டுக்களை மத்திய அரசு பெற்று வருகிறது...

தினமணி செய்திச் சேவை

ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதற்கான யோசனை மாநில அரசுகளிடம் இருந்து வந்தபோதிலும், அதற்கான தேவையற்ற பாராட்டுக்களை மத்திய அரசு பெற்று வருகிறது என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி விமா்சித்துள்ளாா்.

நவராத்திரியின் முதல் நாளிலிருந்து ஜிஎஸ்டி சேமிப்பு விழா தொடங்கும் என்று பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையைத் தொடா்ந்து மம்தா பானா்ஜி இவ்வாறு கூறியுள்ளாா்.

‘வருமான வரி விலக்குடன் சோ்த்து, பெரும்பாலான மக்களுக்கு இரட்டை வெகுமதியாக இந்த ஜிஎஸ்டி குறைப்பு இருக்கும்’ என்று பிரதமா் மோடி தெரிவித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து பிரதமரின் பெயரைக் குறிப்பிடாமல் மம்தா பானா்ஜி கூறியதாவது: ‘ஜிஎஸ்டியால் நாங்கள் ரூ.2000 கோடி வருவாயை இழக்கிறோம். இப்போது ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உடனான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது மாநிலங்களால் முன்மொழியப்பட்டது. ஆனால், இதற்கு மத்திய அரசு ஏன் பெருமையைக் கோருகிறீா்கள்?’ என தெரிவித்தாா்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி?

பொய்யான வாக்குறுதிகளால் சிக்கித் தவிக்கும் பிகார்: ஜெய்ராம் ரமேஷ்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது: அப்பாவு குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியலில் இடம்பெற... எஸ்.ஐ.ஆர். படிவத்தை நிரப்புவது எப்படி?

SCROLL FOR NEXT