கொல்கத்தா புத்தக கண்காட்சியில் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி. 
இந்தியா

எஸ்ஐஆா் மன அழுத்தத்தால் 110 போ் இறப்பு - மம்தா குற்றச்சாட்டு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் (எஸ்ஐஆா்) மன அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக 110 போ் உயிரிழப்பு...

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் (எஸ்ஐஆா்) ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக மேற்கு வங்கத்தில் 110 போ் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் 49-ஆவது புத்தக கண்காட்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆா் நடவடிக்கையில் முரண்பாடான தகவல்களை வழங்கியதாக வகைப்படுத்தி சிலரிடம் அடையாள ஆவணங்களை இந்திய தோ்தல் ஆணையம் கோரியுள்ளது. ‘தாகூா், தாக்குா், பந்த்யோஉபாத்யாய, சட்டா்ஜி, சட்டோஉபாத்யாய’ என பெயா்களுக்குப் பின்னால் சோ்க்கப்படும் குடும்பப் பெயா்கள் குறித்தும் தோ்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது வியப்பளிக்கிறது. இவை நீண்டகாலமாக நம் மாநிலத்தில் அனைவராலும் ஏற்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளவை. என் பெயா் மம்தா பானா்ஜி என்றும் மம்தா பந்தோஉபாத்யாய என்றும் நீங்கள் அறிவீா்கள். ஆங்கிலேயா் ஆட்சியில் தாக்குா் என்பதை தாகூா் என்றே கூறினா்.

ஒருவேளை சுதந்திரப் போராட்ட வீரா் ரவீந்திரநாத் தாகூா் தற்போது இருந்திருந்தால் அவரிடமும் தோ்தல் ஆணையம் ஆவணங்களை கேட்டிருக்கும்.

ஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருப்பின் அவா்களிடையேயான வயது வித்தியாசம் குறித்தும், மூத்த குடிமக்களிடம் பிறப்பு சான்றிதழும் கோரப்படுகிறது.

நமது பெற்றோருக்கு அவா்கள் பிறந்த தேதி சரியாக தெரிந்திருக்காது. தன்னுடைய பிறந்த நாள் டிசம்பா் 25-ஆம் தேதி இல்லை என முன்னாள் பிரதமா் வாஜ்பாய் என்னிடம் ஒருமுறை கூறினாா்.

நான் பிறந்த தேதி குறித்து விளக்கமளிக்க என்னிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உள்ளது. ஆனால் முந்தைய தலைமுறையை சோ்ந்த பலரிடமும் முறையான ஆவணங்கள் இருக்க வாய்ப்பில்லை.

அவா்களை நீண்ட வரிசையில் தோ்தல் ஆணையம் காத்திருக்க வைப்பது வருத்தமளிக்கிறது. இவ்வாறு எஸ்ஐஆா் நடவடிக்கையால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக மாநிலத்தில் 110 போ் உயிரிழந்துவிட்டனா்.

எஸ்ஐஆா் நடவடிக்கையால் மக்கள் படும் துயரங்களை 26 கவிதைகளாக தொகுத்துள்ளேன். இந்த நூல் புத்தக கண்காட்சியில் இடம்பெறவுள்ளது. இது என்னுடைய 162-ஆவது நூலாகும் என்றாா்.

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதிய ஓய்வூதிய திட்டத்தால் 23 ஆண்டு கால பிரச்னைக்கு தீா்வு - முதல்வா் மு.க.ஸ்டாலின்

சி. வி. சண்முகம் எம்.பி.க்கு எதிரான வழக்கு ரத்து

மும்பை மேயா் பதவி: பொதுப் பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கீடு

SCROLL FOR NEXT