நரேந்திர மோடி  ANI
இந்தியா

வருமான வரி, ஜிஎஸ்டியில் சலுகை: பிரதமர் மோடி

நாட்டில் இதுவரை 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டில் இதுவரை 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) தெரிவித்தார்.

நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். இதில், வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்ட சலுகை மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்துப் பேசினார்.

காணொலியில் அவர் பேசியதாவது,

இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. நாளை காலை முதல் ஜிஎஸ்டி சலுகைகள் அமலுக்கு வருகிறது.

உங்களுக்குப் பிடித்தமான அத்தியாவசிய பொருள்களைக் குறைந்த விலை கொடுத்து நாளை முதல் வாங்கலாம். ஜிஎஸ்டி வரிக் குறைப்பானது நடுத்தரக் குடும்பங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை குறைந்த விலையிலேயே வாங்கலாம்.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், நடுத்தர மக்கள் தங்கள் இலக்குகளை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் இந்திய பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும். ஜிஎஸ்டிக்கு முன்பு வரி விதிப்பு சிக்கலானதாக இருந்தது. ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் 99% பொருள்களின் விலை குறைகின்றன. தற்போது, வர்த்தகத்தில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டுள்ளன.

சுதேசி பயன்பாடு

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

உள்நாட்டுப் பொருள்கள் சிறந்த தரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். அவை உலக தரத்துடன் போட்டிபோடும் வகையில் இருப்பது அவசியம். உள்நாட்டுக் தயாரிப்புகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும். சுதந்திரத்திற்குப் பிறகும் சுதேசி பயன்பாடுதான் பலனளித்தது.

நாம் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்.

இதையும் படிக்க | ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பை பவர்-பிளேயில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பாக்.!

கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: பல்வேறு பொருட்களின் விலையை குறைத்த பதஞ்சலி ஃபுட்ஸ்!

இமைக்காரியே... கௌரி!

நாணமோ... ஷில்பா!

SCROLL FOR NEXT