சத்தீஸ்கரில் கபடி போட்டியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், கொண்டகான் மாவட்டத்தில் உள்ள ரவாஸ்வாஹி கிராமத்தில் சனிக்கிழமை இரவு கபடி போட்டி நடைபெற்றது. அப்போது பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரம் உயர் அழுத்த மின் கம்பியின் மீது உரசியுள்ளது.
இதில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் பலியாகினர். மேலும் பலர் தீக்காயங்களுக்கு ஆளானதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
உள்ளூர் கிராமவாசிகள் பாதிக்கப்பட்ட ஆறு பேரை விஷ்ராம்புரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
காயமடைந்த மூன்று பேரில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால், மேம்பட்ட மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். பலியானவர்கள் சதீஷ் நேதாம், ஷியாம்லால் நேதாம் மற்றும் சுனில் ஷோரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.