பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் முதல்வர் முகமாக பார்க்கப்படவில்லை என லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவரும் எம்.பி.யுமான சிராக் பாஸ்வன் தெரிவித்துள்ளார்.
பிகாரில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,
காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடப்பது நல்லது என்றே பார்க்கிறேன். கடந்த முறை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை. ஆனால், இது அழுத்தம் எதிர்க்கட்சிகளுக்கு நிறைந்த அரசியலாக மாறும் என நினைக்கிறேன்.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் பிகாரின் 243 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகக் கூறுகிறார். மறுபுறம், வாக்குத் திருட்டு நடந்ததாக பேரணி செல்கிறார் ராகுல் காந்தி. ஆனால், முதல்வர் முகமாக தேஜஸ்வி அறியப்படவில்லை.
காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனையால் முக்கிய தலைவர்கள் அனைவரும் இங்கு கூடியிருப்பார்கள். வாக்கு விகிதத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை ஏமாற்று வேலையில் ஈடுபட்டது. எங்காவது இதற்கு பதில் அளிக்க காங்கிரஸ் முயற்சி செய்ய வேண்டும். இது குறித்து எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கவனம் செலுத்தி வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்து விவகாரம்: பிரதமர் ஏன் எதுவும் பேசவில்லை? -ஃபரூக் அப்துல்லா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.