இந்தியா

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் சீர்திருத்த முடிவை மாநிலங்கள் இடம்பெறும் ஜிஎஸ்டி கவுன்சில் அண்மையில் எடுத்தது. இந்த முடிவுக்கான பெருமைக்கு பிரதமர் உரிமை கோருவதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.

காங்கிரஸின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக எம்.பி.யும் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பாத்ரா, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விளம்பரப் பதாகைகளை நிறுவி அக்கட்சியினர் ஜிஎஸ்டி குறைப்புக்கான பெருமையை எடுத்துக் கொள்ளலாம். ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வந்துள்ளதால் கார்கள், பைக்குகள், மின்னணு சாதனங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றின் விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பண்டிகைக்கால கொண்டாட்டம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படியும் மக்களிடம் இருந்தும் கடைக்காரர்களிடம் இருந்தும் அமைச்சர்கள் உள்பட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பெற்றுள்ள பின்னூட்டங்களைப் பார்த்தால் மக்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது தெளிவாகிறது.

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் போதுமானவையாக இல்லை என்றும், இது மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. அக்கட்சி தனது 75 ஆண்டுகால ஆட்சியில் 17 விதமான வரிகளை விதித்தது. தனது ஆட்சிக் காலத்தில் வரிவிதிப்பை ஒழுங்குபடுத்த காங்கிரஸ் கட்சி எதையும் செய்யவில்லை.

ஒரே தேசம் - ஒரே வரி என்ற நடைமுறையை அக்கட்சி செயல்படுத்தவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு கடும் நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சி கோரியது. இந்த அரசுதான் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் கோரிக்கை வைத்தபடியே இருக்கின்றனர்.

இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. மக்களின் நலன் தொடர்புடைய காங்கிரஸாரின் அனைத்துக் கோரிக்கைகளையும் மோடி நிறைவேற்றுவார்.

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் அல்லது காங்கிரஸ் கட்சி உரிமை கோருவதை நாங்கள் தடுக்கவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவின் உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்தது ஐசிசி!

ஆன்லைன் சூதாட்டம்: 3 மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் கைது; தெலங்கானா சிஐடி அதிரடி!

பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கவே முடியாது: டிடிவி தினகரன் உறுதி

அரசு கல்லூரிகளில் 881 கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம்: அமைச்சா் கோவி. செழியன்

விவாகரத்துக்காகக் காதலன் மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண்! ஓராண்டு சேர்ந்து வாழ்ந்த பின் நடந்தது என்ன?

SCROLL FOR NEXT