ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை Photo : X / Rajnath singh
இந்தியா

அக்னி- பிரைம் ஏவுகணை: ரயிலிலிருந்து செலுத்தி வெற்றிகரமாக சோதனை

ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

2,000 கி.மீ. தொலைவிலான இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘அக்னி-பிரைம்’ ஏவுகணை ரயிலிலிருந்து ஏவி வெற்றிகரமாக வியாழக்கிழமை சோதிக்கப்பட்டது.

நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்தும் ஏவுகணை ஏவும் திறனை உறுதிப்படுத்தும் வகையில் முதல் முறையாக இத்தகைய சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து இந்த ஏவுகணை ஏவி சோதனை செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

முதல் முறையாக இத்தகைய சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கென ரயிலில் பிரத்யேகமான நடமாடும் ஏவுதளம் அமைக்கப்பட்டு, அதிலிருந்து ஏவி சோதனை மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் குறுகிய காலத்தில் பதிலடி தாக்குதலை அளிக்கும் வகையில், ரயில்களில் எளிதாக இணைத்து நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியும்.

இந்த வெற்றிகரமான சோதனை மூலம், ஓடும் ரயிலிலிருந்து ஏவுகணை ஏவும் திறனைப் பெற்றுள்ள குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. அதிநவீன தகவல்தொடா்பு தொழில்நுட்பம், பாதுகாப்பு நடைமுறைகள் உள்பட முழுவதும் உள்நாட்டு ஏவு திறன் அம்சங்களுடன் அக்னி-பிரைம் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனை, வரும் காலங்களில் பாதுகாப்புப் படைகளில் ரயில் அடிப்படையிலான ஏவுகணை ஏவும் அமைப்புகளையும் அறிமுகப்படுத்த வழிவகுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே, பல வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு, சாலை மாா்க்கமான நடமாடும் அக்னி-பிரைம் ஏவுகணை ஏவும் அமைப்பு பாதுகாப்புப் படைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடனான நான்கு நாள்கள் சண்டை முடிந்து நான்கரை மாதங்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சக்திவாய்ந்த ஏவுகணையான ‘அக்னி’ அணு ஆயுதங்களை நீண்ட தொலைவு சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இதில் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு அக்னி-பிரைம் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

The Indian Army successfully tested the Agni-Prime missile from a train on Wednesday night.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

அண்ணாமலை குடும்பம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

இந்த சர்ச்சையால்... கண்ணீர்விட்ட கயாது லோஹர்!

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

SCROLL FOR NEXT