புது தில்லி: ரஷியாவுடன் கூட்டுறவு கொண்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தில், விரைவில் ஏகே-203 துப்பாக்கி தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச தலையீடுகள், நாட்டின் வளர்ச்சியை குறிக்கீடு செய்யாது, இது நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு புதிய இலக்கை நிர்ணயிக்கவே வழிவகுக்கும். வரும் ஆண்டுகளில், இந்தியா, பல புதிய துறைகளில் கால்பதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வரி விதிப்பு முறையை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் இவ்வாறு கூறியிருப்பதாகத் தெரிகிறது.
இந்திய வளர்ச்சி இரட்டிப்பாகியிருக்கிறது, இது மிகவும் கவனம் ஈர்க்கும் செயல் என்று கூறியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாடு இந்தியாவில் தயாரிப்போம், தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற கொள்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர், ரஷியாவுடன் இணைந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் துப்பாக்கித் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படவிருக்கிறது. பாதுகாப்புத் துறையில் நாம் விரிந்து பரந்த வளர்ச்சியை ஏற்படுத்தவிருக்கிறோம், எங்கும் பயன்படுத்தும் பாதுகாப்புத் தளவாடங்களில் இந்திய தயாரிப்பு என்ற முத்திரை இடம்பெறும் வகையில் நமது முன்னேற்றம் இருக்கும் என்றார்.
இதையும் படிக்க... மருத்துவர், ஐஏஎஸ், பேரிடர் கால நிர்வாகி பீலா வெங்கடேசன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.