மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 
இந்தியா

பிகாரில் 2வது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அமித் ஷா!

பிகாரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துரையாடினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்துரையாடினார்.

இந்தாண்டு இறுதியில் பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசியல் தலைவர்கள் பிகாரில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் இரண்டாவது நாளாக இன்று பிகாரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் அமித் ஷா.

இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கூறியதாவது,

நேற்று மேற்கு சம்பாரனில் உள்ள பெட்டியாவில் அமித் ஷா ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து மாநில தலைமையகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் என்டிஏ வெற்றிபெறுவதற்கான மந்திரத்தை அவர் எங்களுக்கு வழங்கினார். இந்தக் கூட்டத்தின்போது பத்து மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இன்று அமித் ஷா சரைரஞ்சன் (சமஸ்திபூர்) மற்றும் ஃபோர்ப்ஸ்கஞ்ச் (அராரியா) ஆகிய இடங்களில் பாஜக நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். கடந்த 15 நள்களுக்குள் அமித் ஷாவின் இரண்டாவது பிகார் சுற்றுப்பயணம் இதுவாகும்.

அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடிப்பதற்கு முன்பு சமஸ்திபூர் மற்றும் அராரியா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

முன்னதாக செப்டம்பர் 18, 19 அன்று ரோஹ்தாஸ், பெகுசராய் மாவட்டங்களில் நடந்த கட்சி மாநாடுகளில் உரையாற்றினார். அப்போது, ​இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிகார் ஊடுருவல்காரர்களால் நிரம்பி வழியும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று காங்கிரஸின் "வாக்கு திருட்டு" கதையை முறியடிக்க வேண்டும் என பாஜக தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Union Home Minister Amit Shah gave a pep talk to BJP workers in north Bihar for the second consecutive day on Tuesday in the run-up to the assembly polls, which are expected to be announced soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலை நேரத்து மயக்கம்... ஜன்னத் ஜுபைர்

அன்பு செய்யுங்கள்... ரேஷ்மா பசுபுலேட்டி!

Opong புயலுக்குப் பின்..! 11 பேர் பலி எனத் தகவல்! | Philippine

ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது எங்கள் நிலைப்பாடு! மத்திய அமைச்சர் பதில்!

நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT