கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவை அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கரூரில் உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஹேமமாலினி எம்பி தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அமைத்துள்ளார்.
அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புத்த மகேஷ் குமார் ஆகியோர் பாஜக குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு விரைவில் கரூர் வருகை தர உள்ளனர்.
கரூர் நெரிசலுக்கான காரணத்தை ஆராய்வதோடு, பாதிக்கப்பட்டோரையும் பாஜக குழு சந்திக்கும் என ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.